அநியாயம்பா!

வணக்கம். சாப்பாட்டுப் பிரியர்களுக்கு ரொம்பவே பிடிச்ச இடம்னா, அது கல்யாணப் பந்தி தான்! பத்திரிக்கை வந்ததுமே கண்ணை மூடி பலகாரக் கனவு காணத் தொடங்கினா,  சரியா முதல் பந்தியில உட்கார்ந்து சூடா வாழை இலைல சோறு விழுகற வாசத்துல ஆரம்பிச்சு, கடைசியா கொதிக்கக் கொதிக்க சுக்குக் காபியோ, பாதாம் பாலோ குடிக்கற சுகம் வரைக்கும் கற்பனை விரியும், பழையபட கனவு சீன்கள் மாதிரி!!! நானும் அதுக்கு விதிவிலக்கில்லையே!? கல்யாணம், காதுகுத்து, கோவில் கிடாவெட்டு… எல்லா பந்தியிலும் நாம…