அநியாயம்பா!

வணக்கம்.

சாப்பாட்டுப் பிரியர்களுக்கு ரொம்பவே பிடிச்ச இடம்னா, அது கல்யாணப் பந்தி தான்! பத்திரிக்கை வந்ததுமே கண்ணை மூடி பலகாரக் கனவு காணத் தொடங்கினா,  சரியா முதல் பந்தியில உட்கார்ந்து சூடா வாழை இலைல சோறு விழுகற வாசத்துல ஆரம்பிச்சு, கடைசியா கொதிக்கக் கொதிக்க சுக்குக் காபியோ, பாதாம் பாலோ குடிக்கற சுகம் வரைக்கும் கற்பனை விரியும், பழையபட கனவு சீன்கள் மாதிரி!!!

நானும் அதுக்கு விதிவிலக்கில்லையே!? கல்யாணம், காதுகுத்து, கோவில் கிடாவெட்டு… எல்லா பந்தியிலும் நாம முந்தி இருப்போம்! அதுவும் பாய் வீட்டுக் கல்யாணம்னா, “கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?”ன்னு மைண்ட் வாய்ஸ்ல கார்த்தி வருவாரு! அதே கார்த்தி மாதிரி, சட்டி நிறைய பிரியாணியைப் பாத்ததும் அப்படியே அள்ளிட்டுப் போய் சாப்பிடலாமான்னு ஆசையா இருக்கும். இருந்தாலும், மத்தவங்க நலனையும் கருத்தில் கொண்டு, ஒழுங்கா இலையைப் போட்டு சாப்பிட உட்காருவோம்.

நம்ம இலையைப் பாக்குறோமோ இல்லையோ, சிட்டி ரோபோ மாதிரி ரெண்டு கண்ணையும் ரெண்டு திசையில திருப்பி, பக்கத்துல இலைகளை கண்கொத்திப் பாம்பா பாத்துட்டு இருப்போம். ஒரு பீசோ, ஸ்வீட்டோ, ஏன் பிரியாணியில ஒரு முந்திரியோ அவனுக்கு நம்மளைவிட அதிகமா விழுந்துட்டா, அவ்ளோதான்!

ஒண்ணும் பண்ணமுடியாது…😅 ‘அநியாயம்பா’ அப்டினு மனசுக்குள்ள சலிச்சுக்குவோம்! அடுத்த ரவுண்டுக்கு தயாராகி அதுலயாச்சும் முன்னிலை வகிக்க முடியுமான்னு பார்ப்போம்! ஆனா எந்தக் காரணத்தைக் கொண்டும் பிரியாணியை மட்டும் வேணாம்னு சொல்லிடவே மாட்டோம்!🤩

இந்தியர்களுக்கு பிரியாணிமேல ஒரு தனிப் பிரியம் தான். இருக்காதா பின்ன? பிரியாணி நம்ம இந்திய மண்ணில பிறந்த உணவாச்சே!! ஆமாங்க, அக்பர் காலத்தில, அஜ்மீர் கோட்டையில அவசர கதியில ஒருநாள் சமைக்கப்பட்ட புலால் சோறுதான் நம்ம பிரியாணியோட ancestor! அக்பருக்கு அந்த மாமிசச்சோறு ரொம்பவே பிடிச்சுப்போக, அடிக்கடி அதையே சமைக்கச் சொல்லிக் கேட்பாராம். முகலாயக் கோட்டையில் மட்டும் வீசிய பிரியாணி மணம், கொஞ்ச கொஞ்சமா, ஆவாத், ஆந்திரா, கர்நாடகான்னு தேசம் முழுதும், காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும்.. அந்தத் தூக்கலான நெய்மணக்கும் பிரியாணியின் வாசம் வீசியது.

அதே நேரம் தமிழ்நாட்டுலயும் பிரியாணியோட ஒரு வெர்ஷனான, ‘கறியமுது’ சமைக்கப்பட்டதை இலக்கியக் குறிப்புகள் காட்டுது. அதிலும், இறைச்சியை நெய்யில் சமைக்கும் முறையை தமிழகத்தில்தான் முதலில் பழகினாங்க என்றும் அதில சொல்லப்படுது. இவ்வளவு ஏன், இன்னுமே ‘பெட்டி புலால் சோறு’ன்னு ஒரு delicacy நம்ம சென்னைல சக்கைப்போடு போடுது! (ஒரே ஒரு தடவை தான் சாப்ட்டேன்… சீரியஸா… விழுந்துட்டேன்!😅😍)

எங்க பிறந்திருந்தா என்ன? இந்திய உணவுங்கற ஒரு அடையாளம் போதாதா, நம்ம பிரியாணியை நேசிக்க!? என்னைப் பொறுத்தவரை*(என்னோட தனிப்பட்ட கருத்து) நம்ம நாட்டோட தேசிய உணவாகவே பிரியாணியை அறிவிக்கலாம்! அதுக்கு எல்லாத் தகுதியுமே இருக்குங்க நம்ம பிரியாணிக்கு.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, லக்னோ பிரியாணி, முகலாய் தம் பிரியாணி, ஏன்… மலபார்ல பிரியாணின்னு சொல்லி வெள்ளை சாப்பாட்டுல சிக்கனை ஒளிச்சுவச்சு தருவாங்களே🤣… எல்லாமே உணவுப் பிரியர்களோட மனசுக்குப் பிடிச்சதுதான்! பிரியாணியில மட்டும்தான் ஊரு, மொழி, இனம், நிறம்னு எந்தப் பிரிவினையும் இல்லாம, ‘பிரியாணி’ன்னு எழுதிக் குடுத்தா புளிசோறைக் கூட சாப்பிடற அளவுக்கு அதுமேல பாசம் வச்சிருக்கோம்!

புரட்டாசி மாசமாப் போச்சு… இல்லைன்னா இப்ப இதை எழுதும்போதே ரெண்டு ப்ளேட் பிரியாணியை கபளீகரம் பண்ணியிருப்பேன்! பிரியாணி சாப்பிடறவங்கள்ல ரெண்டு ரகம்… ஒண்ணு பிரியாணிப் பிரியர், இன்னொண்ணு பிரியாணி வெறியர்!!

பிரியர்.. வெஜிடபிள் பிரியாணியைக் குடுத்தாக் கூட நன்றியோட வாங்கி சாப்ட்டுருவார்.

வெறியர்… ம்ஹூம். மர் கயா!! பிரியாணி சாப்பிடறதை ஒரு சடங்காவே நடத்துவாங்க! இவங்க வாழ்க்கைல சாந்தி, பீஸ் எல்லாம் இருக்கோ இல்லையோ, பிரியாணில லெக் பீஸ் கண்டிப்பா இருந்தாகணும். ரைத்தா(பச்சடி)ல வெங்காயம் தூக்கலா இருக்கணும், கொத்துமல்லி தூவலா இருக்கணும். கூட கத்திரிக்கா குழம்பு(அதாங்க, சால்னா) இல்லைன்னா, அங்க எத்தனை தலை உருளுமோ தெரியாது!🤣🤣

பிரியரோ, வெறியரோ… பிரியாணியை நேசிச்சாலே, அவனுக்கு நம்ம மண் மேல பாசமும், பக்தியும் இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கலாம். பிரியாணியை சாப்பிடற விதத்தை வச்சே அவன் மனசைக் கூட கணிச்சிடலாம்! சண்டேவுக்கு அவன் அகராதியில மீனிங் பாத்தாலே, அங்க பிரியாணின்னு தான் எழுதியிருக்குமாம்!

இந்த மனிதப் பிராணிக்கும் பிரியாணிக்கும் இருக்கற பிணைப்பை, ஒரு அழகான காவியமாகவே வடிக்கலாம்! சினிமாவுல எழுதுற காதல் பாட்டுக்கள் எல்லாத்தையும் பிரியாணிக்கு டெடிகேட் பண்ணலாம்! பாதியில விட்டுட்டுப் போற பழக்கம் காதலுக்கு வேணா இருக்கும்… காதர்பாய் பிரியாணிக்கு இருக்காது-😎🤩😅

“நீயே வாழ்க்கை என்பேன்…
இனி வாழும் காலம் எல்லாம்…
நீயே போதும் என்பேன்…
உயிரே, என் உலகமே…”

பிரியாணிக்காக!

அன்புடன்,
மது.

நமக்கு சோறுதான் முக்கியம் 😇😌

One Comment Add yours

  1. Ashik Mohamed says:

    புரட்டாசி மாசம், சோறுதான் முக்கியம்..
    விரதம் இருக்குறவங்க பாவம்ல

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s